நல்லாட்சியில் மலையளவு ஊழல்...!!! » Sri Lanka Muslim

நல்லாட்சியில் மலையளவு ஊழல்…!!!

ranil

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

ஷிபான் BM
மருதமுனை.


கடந்த ஜனாதிபதித் தேர்தலிலே வீட்டுக்கு வீடு சென்று மகிந்தவை “ஹொறா ஹொறா” என்று குறை கூறியதோடு மாத்திரமன்றி, மேடைக்கு மேடை அவதூறு முழங்கிய நல்லாட்சி மகிந்த திருடிய மயிரைக்கூட கண்டுபிடித்து மக்கள் மன்றத்தில் இன்றுவரை நிரூபிக்கவில்லை.

ஆனால் நல்லாட்சியில் ஐ.தே.கா வின் உறுப்பினர் ரவி கருணானாயக்க இன்று மலையளவு ஊழல் புரிந்து மாட்டிக்கொண்டு பரிதவிப்பதனைப் பார்க்கையில் வேடிக்கையாக உள்ளது. கள்வர்களுக்கே விதானை வேலை கொடுப்பதற்காக வாக்களித்த எமது மக்களுக்கு மீண்டுமொருமுறை சல்லூட்.

இந்த நாட்டினை விரும்பும் மக்களின் வாழ்வை வளப்படுத்தும் கஜானாவான திறைசேரியிலேயே ரவி கருணானாயக கை வைத்திருப்பது இந்த நாட்டை ஆள்வதற்கு ஐ.தே.கா வோ, அதன் தலைமைக்கோ எந்தத் தகுதியும் இல்லை என்பதனை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது. நமது மறைந்த மாமனிதர் பெரும் தலைவரின் வசியத்தும் இதனையே ஞாபகப்படுத்துகிறது.

கொடூர பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை மீட்டு, சகல செளபாக்கியங்களுமுடனான பயணங்களுக்கான பாதைகளையும் பாலங்களையும் வடிவமைத்து நாட்டை மீளமைத்த மகிந்த போன்ற ஓர் தலைவனை ஓரங்கட்டியதைப் பொறுத்துக்கொள்ளாமல் காலமே இன்று சூத்திரதாரிகளின் சுயத்தை உலகுக்கு அம்பலப்படுத்துகின்றது. இதனை  அதாவுல்லா போன்றோர் தூரநோக்கான சிந்தனையுடன் உறைக்க உரைத்தும் எமது சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை.

அன்று முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்த வட்டரக்க விஜித தேரர் இன்று நீதியைக் கோர, நீதிமன்றினால் உட்தள்ளப்படுகின்றார். ஆனால் முஸ்லிம்களை வஞ்சித்து தூசித்த ஞானசார தேரர் நீதிமன்றை அவமதித்தும், தீர்ப்பை கிழித்தெறிந்தும் சுதந்திரமாக உலாவருகின்றான். நம் நன்மக்கள் இதனையும் சகித்து கடந்து போகும் மனோபக்குவத்தினை வரவழைத்து தொடர்வதே ஆசியாவின் ஆச்சர்யம்.

ஆகவே இனி வரும் காலங்களிலாவது எமது முஸ்லிம் சமூகம் ஆராய்வு மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு, விளக்கிலே தானே சென்று விழும் விட்டில்கள் போல் அல்லாது தீர விசாரித்து முடிவுகளை எடுக்கவேண்டியது காலம் காட்டிய உண்மையாகும்.

Web Design by The Design Lanka