நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் இந்நேரம் நாட்டில் பாதிபேர் மரணித்திருப்பர்..! - Sri Lanka Muslim

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் இந்நேரம் நாட்டில் பாதிபேர் மரணித்திருப்பர்..!

Contributors

கடந்த வாரத்தில் கொரோனா மரணங்கள் நாள் ஒன்றுக்கு 150ஐ தாண்டியதாகவும் இதே நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் நாட்டின் சனத் தொகையில் பாதிபேர் உயிரிழந்திருக்கக் கூடும் என அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்தார்.

சஜித் பிரேமதாஸ திடீரென வைத்தியராக மாறி மருந்து வகைகளை கூறி வருவதாகவும் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் நாடு சுடுகாடாக மாறியிருக்க வாய்ப்பு இருந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

வைத்தியர் ராஜித்த சேனாரத்ன அவர் தனியாக செய்த வேலைகளை இன்று நான்கு அமைச்சர்கள் புரிவதாக கூறுகிறார். அவர் நன்றாக செய்தது எமக்குத் தெரியும் என ரோஹித்த குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் மக்களின் கண்ணீரில், மரணங்களில் அரசியல் செய்ய வேண்டாம். இதனை நாம் மக்கள் விடுதலை முன்னணியில் அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் கூறுகிறோம் என்று அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team