நல்லாட்சி என்பது வெறும் அரசியல் கோசமே - NFGG » Sri Lanka Muslim

நல்லாட்சி என்பது வெறும் அரசியல் கோசமே – NFGG

nfgg

Contributors
author image

ஊடகப்பிரிவு

அரசாங்கம் நல்லாட்சி என்பதனை வெறும் அரசியல் கோசமாக மாத்திரம் மட்டுப்படுத்தி கொள்ளாமல் உண்மையான அர்த்தமுள்ள நல்லாட்சியை நிறுவிமக்களின் அபிலாசைகளையும் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றுவதில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படவேண்டும்’ என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜனாதிபதியிடமும் பிரமரிடமும் வேண்டுகோள்விடுத்திருக்கிறது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…

‘முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அராஜக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளுடனேயே இந்த புதிய ஆட்சியை நிறுவினர். இந்த ஆட்சி மாற்றத்திற்காக பொது மக்களும்சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் பொது எதிரணியை வழிநடாத்திய கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் தமது உயிரைப் பணயம் வைத்தே போராடினர்.

கடந்த ஆட்சியின் போது தலைவிரித்தாடிய அராஜகம் ஜனநாயக விரோத செயற்பாடுகள் சட்டம் ஒழுங்குநிலை நிறுத்தப்படாமை ஊழல் மோசடி வீண் விரயம் அதிகார மற்றும் பொதுச் சொத்துக்களின் துஸ்பிரயோகம்போன்ற பல்வேறு காரணங்களை வைத்தே மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினர்.

மேற்சொன்ன தவறுகளையும் பிழைகளையும் திருத்தி ஜனநாயக விழுமியங்களை மதித்தல் சட்டத்தின்ஆட்சியினை நிறுவுதல் நீதியை நிலை நிறுத்தல சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டல் ஊழல்மோசடிகளை ஒழித்தல் வீண் விரயத்தை இல்லாமல் செய்தல் ஜனாதிபதி அமைச்சர்கள் இபாராளுமன்றஉறுப்பினர்களின் ஆடம்பரங்களைக் குறைத்தல்இ வெளிப்படைத்தன்மையை பேணுதல் போன்ற பல்வேறுவிடயங்களையும் உள்ளடக்கிய ஒரு நிர்வாகத்தையேநாம் நல்லாட்சி அ சாங்கமாக எதிர்பார்த்தோம்.

மேற்படி பண்புகளைக் கொண்ட நல்லாட்சியைநிறுவுவதற்கு 2015 ஜனவரி 8 இல் ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேனா அவர்களுக்கும் 2015 ஆகஸ்ட 17 இல் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் மக்கள்தமது ஆணையை வழங்கினர்.

புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்திலும்அதற்குப் பிற்பட்ட காலத்திலும் முன்னையஅரசாங்கத்தோடு ஒப்பிடும்போது பல்வேறுமுன்னேற்றங்களும் நல்ல மாற்றங்களும் ஏற்பட்டுள்ளதைநாம் பாராட்டுகிறோம்.

ஆனால்இ தற்போதைய அரசாங்கம் நல்லாட்சிப்பண்புகளை படிப்படியாக இழந்து வருவதனை அவதானிக்கமுடிகின்றது. அது குறித்த எமது அவதானங்களையும்அதிருப்தியினையும் ஜனாதிபதி அவர்களுக்கும் பிரதமர்அவர்களுக்கும் தெரியப்படுத்த விரும்புகின்றோம். நாமும்ஆட்சி மாற்றத்தின் பங்குதாரர்கள் என்ற தார்மீகஉரிமையோடு பின்வரும் விடயங்களை சுட்டிக்காட்டவிரும்புகின்றோம்.

1. கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும்ஊழல் மோசடிகள் சம்பந்தமான விசாரணைகள்முன்னெடுக்கப்பட்ட போதும் அவை திருப்தியளிப்பதாகஇல்லை. எனவே இ இவ்விடயம் குறித்து இதனை விடவினைத்திறன் மிக்கதாகவும் குற்றவாளிகளை சட்டத்தின்முன்நிறுத்தி உரிய தண்டனைகளைப் பெற்றுக்கொடுக்கவும் அரசாங்கம் ஆவன செய்ய வேண்டும்.

கடந்த ஆட்சியின் போது பல்வேறு ஊழல்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு தற்போதுஅரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கும்அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் இராஜாங்கஅமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்அமைச்சு செயலாளர்கள் திணைக்களத்தலைவர்கள் அரசஉத்தியோகத்தர்கள் விடயத்தில் பக்க சார்பற்றவிசாரரணைகள் நடாத்தப்பட வேண்டும்.

2. இனவாதத்தைத் தூண்டி இனங்களுக்கிடையிலானஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் பாதிக்கக்கூடியபகை மற்றும் விரோதத்தை ஏற்படுத்தக்கூடியபிரச்சாரங்களை நிறுத்துவதற்கு உடனடியானநடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இனநல்லிணக்கத்தை பாதிக்கும் செய்திகளைஇ தகவல்களைபிரசுரித்தல் ஒலி ஒளி பரப்புச் செய்தல்இ சமூகவிலைத்தளங்களில் பரப்புதல் போன்றவை சட்ட ரீதியாககட்டுப்படுத்தப்பட வேண்டும்.

3. புதிதாக அமைக்கப்படும் அல்லது விஸ்தரிக்கப்படும்கல்விக்கூடங்கள் சமய வழிபாட்டுத்தலங்கள் கலாசாரநிலையங்கள் தொடர்பான விடயங்களை உத்தியோகபூர்வமாக அரச நிறுவனங்களும் அதிகாரிகளும் மாத்திரமேகையாள வேண்டும். இவ்வாறான விடயங்களில் மதகுருமார்களோ சமூக நிறுவனங்களோ தலையிடுவதுமுற்றாக தடுக்கப்படல் வேண்டும்.இவ்வாறு சட்டத்தைகையிலெடுத்திருக்கும் நபர்கள் இயக்கங்கள் தொடர்பில்அரசாங்கம் சட்டத்தையும் ஒழுங்கையும் கண்டிப்பாககடைப்பிடிக்க வேண்டும்.

4 . நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் தேசியபொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் என்ற வகையில்பொதுமக்கள் மீது வரிச்சுமைகளை படிப்படியாகஅதிகரிப்பதை விட்டு அரசாங்க நிர்வாகத்தை கொண்டுநடாத்துவதில் சிக்கனமும் எளிமையும் கடைப்பிடிக்கப்படவேண்டும். குறிப்பாக ஜனாதிபதிஇ பிரதம மந்திரியின்நாளாந்த நிர்வாக செலவுகள் உட்பட அமைச்சர்கள்இ பிரதியமைச்சர்கள்இ இராஜாங்க அமைச்சர்கள்இ பாராளுமன்ற உறுப்பினர்கள்இ மாகாணசபையின்ஆளுனர்கள்இ முதலமைச்சர்கள்இ அமைச்சர்கள்இ உறுப்பினர்கள்இ போன்றவர்களின் நிர்வாகச் செலவுகள்என்ற பெயரில் கட்டிடங்களுக்காகவும் அதி சொகுசுவாகனங்களுக்காகவும் ஆடம்பர வசிப்பிடங்களுக்காகவும்செய்யப்படும் மேலதிக செலவுகள் அனைத்தும்உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

5. இயற்கை மற்றும் செயற்கை அனர்த்தங்களால்அசாதாரண சூழ்நிலைகளை மக்கள் எதிர் கொள்ளும்போது அவர்களது அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்து கொடுப்பதில் அரசாங்கம் வினைத்திறனுடன்செயற்பட வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பங்களின் போதுஅரசாங்கம் போதிய தயார் நிலையில் இருக்கவில்லையென்பது அண்மைக்கால மண்சரிவுகள் வெள்ள அனர்த்தம்மற்றும் சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட பாரியஅனர்த்தம் போன்ற சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டது.
இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது சிவில் சமூக சமயநிறுவனங்கள் பொதுமக்கள் இன மத பிரதேசவேறுபாடின்றி பரஸ்பரம் உதவிகள் ஒத்தாசைகளை வழங்கிநிலைமைகளை சமாளித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் 100 வீதம் அரசாங்கம் பொறுப்பெடுக்க வேண்டியவிடயங்களில் குறிப்பாக சாலாவ இராணுவ முகாம்பாதிக்கப்பட்ட விடயத்தில் கூட அரசாங்கம்அசிரத்தையாக நடந்து கொண்டமைகண்டிக்கத்தக்கதாகும்.

எனவே இவ்விடயத்தில் உரிய கவனத்தைச் செலுத்திஅவர்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வருவதற்குதுரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நாம் மேற்சொன்ன விடயங்களை ஜனாதிபதி அவர்களும்பிரதம மந்திரி அவர்களும் கவனத்திலெடுத்து நல்லாட்சிஅரசாங்கம் என்பதனை வெறும் கோசமாக மாத்திரம் வரையறுத்துக் கொள்ளாமல் உண்மையான அர்த்தமுள்ள நல்லாட்சியை நிறுவி மக்களின் அபிலாசைகளையும் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றுவதில் பொறுப்புடன்செயற்பட வேண்டும் என வேண்டுகின்றோம்.

photo_622915

Web Design by The Design Lanka