நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள் குறித்து டோனி, ஜனாதிபதிக்கு பாராட்டு - Sri Lanka Muslim

நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள் குறித்து டோனி, ஜனாதிபதிக்கு பாராட்டு

Contributors
author image

Editorial Team

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் மற்றும் 7.8 என்ற பொருளாதார வளர்ச்சியை முன்கொண்டு செல்லல் என்ற இரண்டு விடயங்கள் குறித்து அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் இலங்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்

 

நியூயோர்க்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்தபோது டோனி அபோட் இந்த கருத்தை வெளியிட்டார்.

 

7.8 என்ற வீதத்தில் பொருளாதார அபிவிருத்தியை முன்கொண்டு செல்லும் நடவடிக்கையானது இலங்கையை பொறுத்தவரை குறிப்பிடத்தக்க அம்சமாகும் என்று அபோட் குறிப்பிட்டார்.

 

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் அமர்வுக்கு புறம்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் டோனி அபோட்டும் சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடல்களை நடத்தினர்.

 

இதன்போது மஹிந்த ராஜபக்ச இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகள் குறித்து அபோட்டுக்கு விளக்கமளித்தார்

Web Design by Srilanka Muslims Web Team