நேற்றிரவு தெஹிவளை கடவத்தை பள்ளிவாசல் மீது தாக்குதல் ; இப் பகுதியில் தொடந்தும் பதற்றநிலை -அமைச்சர் றிசாத் மற்றும் அசாத் சாலி ஸ்தலத்திற்கு விஜயம் - Sri Lanka Muslim

நேற்றிரவு தெஹிவளை கடவத்தை பள்ளிவாசல் மீது தாக்குதல் ; இப் பகுதியில் தொடந்தும் பதற்றநிலை -அமைச்சர் றிசாத் மற்றும் அசாத் சாலி ஸ்தலத்திற்கு விஜயம்

Contributors

-சர்ஜூன் ஜமால்தீன்-

நேற்றிரவு 11.30 மணியளவில் தெஹிவளை கடவத்தை வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஸாபி பள்ளிவாசல் மீது விசமிகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. மோட்டார் சைக்கல்களில் வந்த சிலர் கற்கள் கொண்டு பள்ளிவாசலின் ஜன்னல் மற்றும் கூரை மீது தாக்குதல் நடத்தியதுடன்  சத்தமிட்டு ஓடியுள்ளதாக கூறப்படுகின்றது.

இத்தாக்குதலில் பள்ளிவாசலின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியுள்ளது. இவர்களால் வீசப்பட்ட கற்கள் பள்ளிவாசலினுள் விழுந்துள்ளது. எனினும் அங்கு தங்கிய எவருக்கும்  காயம் ஏற்பட வில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மூன்று நாட்களாக குறிப்பிட்ட பள்ளிவாசலை அகற்றுவதற்கு பல பிரயத்தனங்களை இனவாதிகள் மேற்கொண்டு வருகின்றனர்.  எனினும் மஸ்ஜிதுல் ஸாபி பள்ளிவாசல் முறையாகவக்பு சபையில்  பதியப்பட்டு 10 வருடங்களாக இயங்கிக் கொண்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாக்குதல் இடம்பெற்ற வேளை  பள்ளி வாசலில் தங்கியிருந்தோர் அவசர இலக்கத்துடன் தொடர்பு கொண்டதனால் கொஹூவலை பொலிசார் பள்ளிவாசலுக்கு வருகை தந்ததுடன் பதற்ற நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக பொலிசார் குறிப்பிட்டனர்.

இத்தாக்குதல் தொடர்பில் பள்ளியில் கடமைபுரிபவரிடம்கேட்டபோது ;-

கடந்த சில நாட்களாக பள்ளிவாசலுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக தனியாக உறங்கும் அச்சத்தில் அயலில் உள்ள சகோதரர் ஒருவரையும்  துணைக்கு அழைத்ததாகவும் 11.30 மணியளவில்  தூக்கத்திற்கு செல்லும் போதே கற்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் பொலிசாருக்கும் பள்ளி நிர்வாகிகளுக்கும் அறிவித்ததுடன் பள்ளி நிர்வாகிகள்  முஸ்லிம் அரசியல் வாதிகள் மற்றும் ஊடகங்களுக்கும் அறிவித்ததாகவும்  எனினும் நள்ளிரவு என்று பாராமல் அமைச்சர் றிசாத் பத்தியுதீன் மற்றும் அசாத் சாலி பள்ளிவாசலுக்கு வருகை தந்தது தமக்கு சந்தோசத்தையும் மனதைரியத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது என்று அவர் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த அமைச்சர்  றிசாத் பதியுதீன் தாக்குதல்  தொடர்பில் கருத்துவெளியிட்ட போது;-

பேரீன வாத சக்திகள் முஸ்லிம்களின் வளர்ச்சியை அடக்கி ஒடுக்குவதாக காட்டி அதில் அரசியல் செய்ய முற்படும் ஒரு சில சுயநலவாதிகள், முஸ்லிம்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் பிரச்சினைகளை மூட்ட முனைந்து கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியே இப்பள்ளி வாசலுக்கு எதிராக தற்போது மேற்கொள்ளப்படும் எதிர்ப் பிரச்சாரமாகும். கடந்த மூன்று நாட்களாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதால் இத்தாக்குதலை நடத்திய விசமிகள் உடனடியாக கைது செய்யபடவேண்டும். இச்சம்பவத்தின் பின்னணியில் யார் இருந்தாலும் அவர்கள் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனக்குறிப்பிட்டார்

அத்துடன் இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்தினரிடம் கலந்துரையாடிய அமைச்சர்  இப்பள்ளி வாசலில் தொடர்ந்து தொழுகையினை மேற்கொள்வதற்கு என்னால் இயலுமான உதிவிகளை செய்வேன் என உறுதியளித்தார்.

அத்துடன் இத்தாக்குதல் சம்பவத்தை நடத்தியவர்களை உடனடி கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கும்படி கொகுவலை பொலிஸ் நிலைய பொறுப்திகாரியிடம் பணிப்புரை விடுத்ததுடன் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பொலிஸ்மா அதிபரின் விஷேட கவனத்திற்கும் கொண்டுவந்துள்ளதாகவும் முஸ்லிம்கள்  ஒற்றுமையாக செயற்படுவதன் மூலமே  இவ்வாறான இனவாதிகளின் சதிகளை தோற்கடிக்க முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த அசாத் சாலி குறிப்பிடும் போது;-

நாட்டில் மத சுதந்திரம் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது. நாட்டில் விபச்சார விடுதிளும் கெசிநோக்களும் சமுகத்தை சீரழிக்கின்றன.  எனினும் அவைகளை தடுக்காமல் ,அவற்றிக்கு எதிராக போராடாமல் ஏன்  இந்த இனவாதிகள் பள்ளிவாசல்களை தாக்குகின்றனர் என கேள்வி எழுப்பினார். அத்துடன் இப்பள்ளிவாசல் தாக்குதல் சம்பவத்துடன் இலங்கையில் 29 பள்ளிவாசல் தாக்கப்பட்டுள்ளன.ஆனால் அரசாங்கம் இது வரை எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வில்லை என குறிப்பிட்டார்.

குறித்த இடமானது மத்ரஸா நடத்துவதற்கு மாத்தரமே அனுமதிக்கப்பட்டுள்ளதாவும் ஆனால் அங்கு தொழுகையும் நடத்தப்படுவதாகவும்  இங்கு தொழுகை மேற்கொள்வதை நிறுத்த வேண்டும் என்ற பிரச்சாரத்தை சில இனவாதிகள் முடக்கி விட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத் தாக்குதல் காரணமாக பள்ளியைச் சுற்றியுள்ள முஸ்லிம் குடும்பங்கள் அச்சத்தில் உள்ளதாக கூறுகின்றனர்.

thehiwala kadawatha mosque attack00

 

thehiwala kadawatha mosque attack1

thehiwala kadawatha mosque attack3

 

thehiwala kadawatha mosque attack4

thehiwala kadawatha mosque attack5

 

thehiwala kadawatha mosque attack7

thehiwala kadawatha mosque attack8

thehiwala kadawatha mosque attack9

thehiwala kadawatha mosque attack000

 

Web Design by Srilanka Muslims Web Team