நளீம் ஹாஜியாரின் நான்காவது ஆண்டு நினைவுச் சொற்பொழிவு - Sri Lanka Muslim

நளீம் ஹாஜியாரின் நான்காவது ஆண்டு நினைவுச் சொற்பொழிவு

Contributors

ஜாமியா நளீமியா கலாபீடம் மற்றும் இக்ராஹ் தொழில்நுட்பக் கல்லூரியின் ஸ்தாபகர் மர்ஹூம் நளீம் ஹாஜியாரின் 4 ஆவது அண்டு நினைவுச் சொற்பொழிவு இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 06.00மணிக்கு கொழும்பு தபால் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

 

இந் நிகழ்வினை 4 ஆவது முறையாகவும் நளீமீயாவின் பழைய மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந் நிகழ்வு ராபீதத்துன் நளீமிய்யீன்களின் தலைவர் அஷ்ஷெய்க் அப்துல் ராசீக் தலைமையில் நடைபெற்றது. இஸ்லாமிய மறுமலச்சியின் தலைவர் யாக்ஹூத் நளீம்,நளீமிய்யாவின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி, பிரதிப் பணிப்பாளர் அகார் முஹம்மத், பேராசிரியர்சோ. சுந்திரசேகரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

ஜாமிய்யாவின் பழையமாணவர்கள், கல்வியலாளர்கள் நளிம் ஹாஜியாரின் உறவினர்களென என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 

“Knowledge Economy and Sri Lnaka Muslim” கல்விப் பொருளாதார அறிவும் இலங்கையின் முஸ்லிம்களும் எனும் தலைப்பில் பேராசிரியர் சந்திரசேகரம் பிரதான உரை நிகழ்த்தினார்.

இந்த நாட்டில் கல்விக்காக பணியாற்றிய அறிஞர் சித்திலெப்பை, ஜ.எல். அப்துல் அசீஸ், ரீ.பி ஜாயா,கலாநிதி அசீஸ், ஆகியோர் வரிசையில் நளீம் ஹாஜியாரும் இடம் பிடித்துள்ளார். நளீம் ஹாஜியாரின் கல்விச் சேவைக்காக நாம் அவரை நினைவு கூறக் கடமைப்பட்டுள்ளோம் என கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி தனது தலைமையுரையில் தெரிவித்தார்.

 

கலாநிதி அசீஸ் மற்றும் கலாநிதி ரீ.பி ஜாயா ஆகியோருக்கு மன்றங்கள் அமைத்து வருடந்தம் நினைவுச் சொற்பொழிவுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில் நளீம் ஹாஜியாரையும் ஜாமிய்யா பழைய மாணவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர் என கலாநிதி சுக்ரி மேலும் தெரிவித்தார்.(meelpa.nt)

Naleem-Haji5

 

Naleem-Haji3

Naleem-Haji7

Naleem-Haji4

Naleem-Haji2

Naleem-Haji1

Web Design by Srilanka Muslims Web Team