நள்ளிரவிலும் தொடர்ந்து கடும் குளிரின் மத்தியிலும் தொடரும் மடு விவசாயிகளின் போரட்டம் தீர்வு கிடைக்கும் வரை தொடரும் என விவசாயிகள் எச்சரிக்கை. » Sri Lanka Muslim

நள்ளிரவிலும் தொடர்ந்து கடும் குளிரின் மத்தியிலும் தொடரும் மடு விவசாயிகளின் போரட்டம் தீர்வு கிடைக்கும் வரை தொடரும் என விவசாயிகள் எச்சரிக்கை.

Contributors

மன்னார் மடுவில் இரவிரவாக உண்ணாவிரத போராட்டமொன்றை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மன்னார் மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் கோயில் மோட்டை பகுதியில் உள்ள விவசாய நிலங்களை அங்கு விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளிடமிருந்து பறித்து தனியார் தொண்டு நிறுவனத்திற்கு மன்னார் ஆயர் இல்லம் வழங்க முற்பட்டதை எதிர்த்து அப்பகுதி மக்கள் இன்று காலை 9.00 மணிமுதல் போராட்டமொன்றை மேற்கொண்டிருந்த நிலையில், உறுதிப்படுத்தப்பட்ட தீர்வு ஏதும் கிடைக்காத நிலையில் இரவிரவாக உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by The Design Lanka