நவம்பர் 15 இல் பொது விடுமுறை? » Sri Lanka Muslim

நவம்பர் 15 இல் பொது விடுமுறை?

Contributors

(tm)

பொதுநலவாய அரசாங்க தலைவர்கள் கூட்டத்தின் முதல் நாளான நவம்பர் 15ஆம் திகதியன்று பொதுவிடுமுறை தினமாக அறிவிக்கப்படக் கூடுமென தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாநாட்டை முன்னிட்டு அமுல்படுத்தப்படவுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளே மேற்படி விடுமுறையை அறிவிப்பதற்கு பிரதான காரணம் என குறிப்பிடப்படுகின்றது.

மாநாட்டின் முதல் தின கூட்டம் காலை 9 மணியிலிருந்து 11 மணிவரை கொழும்பில் அமைச்துள்ள தாமரைத் தடாக அரங்கில் நடைபெறும். அதன்போது அப்பகுதியினூடாக போக்குவரத்து தடை செய்யப்படும்.

இதனால் கொழும்புக்குள் வாகனங்களின் வருகை தடைப்படும். இதுவும் நவம்பர் 15ஆம் திகதி விடுமுறை அறிவிக்கப்பட காரணம் என கூறப்படுகிறது.

தாமரைத் தடாக அரங்கத்தினை அடுத்துள்ள வீதிகளிலேயே நாட்டுத் தலைவர்களையும் முக்கியஸ்த்தர்களையும் அமைத்துவரும் வாகனங்கள் நிறுத்தப்படவுள்ளன. இந்த மாநாட்டுக்காக அதியுயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் அமைந்திருக்கும் என்று பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் 1976இல் நடந்த அணிசேரா நாடுகளின் மாநாட்டின் பின்னர் இடம்பெறும் இரண்டாவது பெரிய சர்வதேச மாநாடு இந்த பொதுநலவாய மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.

 

Web Design by The Design Lanka