நவீனமயப்படுத்தப்பட்ட பேலியாகொட மீன் சந்தைக் கட்டடம் பஷில் ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது - Sri Lanka Muslim

நவீனமயப்படுத்தப்பட்ட பேலியாகொட மீன் சந்தைக் கட்டடம் பஷில் ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது

Contributors

பேலியாகொட மீன் சந்தையின் நவீனமயப்படுத்தப்பட்ட மொத்த விற்பனைப் பகுதி மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலுக்கு அமைய கொறோனா பாதுகாப்பு நடைமுறைகளை உள்ளடக்கி நவீன மயப்படுத்தப்பட்ட குறித்த கட்டிடத் தொகுதி, பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பஷில் ராஜபக்ஷவினால் நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

கடந்த வருடம் பேலியகொட மீன் சந்தையில் ஏற்பட்ட கொறோனா தொற்றுக் காரணமாக குறித்த சந்தையின் வியாபார நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தன.

இருப்பினும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசகர ஆகியோர் அமைச்சு அதிகாரிகளின் ஒததுழைப்புடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளை தொடர்ந்து சுகாதார முறைகளுக்கு அமையக் குறித்த மட்டுப்படுத்தப்பட்ட முறையில் சந்தையின் வியாபார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், மொத்த விற்பனையை விரிவுபடுத்தும் வகையில் நவீன வசதிகளுடனான குறித்த கட்டிடத் தொகுதி உருவாக்கப்பட்ட நிலையில், நேற்றையதினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team