நாடளாவிய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் இளைஞர் வலுவூட்டல் நிகழ்ச்சி - Sri Lanka Muslim

நாடளாவிய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் இளைஞர் வலுவூட்டல் நிகழ்ச்சி

Contributors

 

-பழுலுல்லாஹ் பர்ஹான்-

ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் கடந்த 3 தசாப்தங்களுக்கு மேலாக மாணவ இளைஞர்களின் கல்வி மற்றும் பண்பாட்டு மறுமலர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

அந்த வகையில் அமைப்பின் வருடாந்த நிகழ்வுகளில் ஒன்றான க.பொ.த (சாஃத) பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான 5 நாள் வதிவிட ‘இளைஞர் வலுவூட்டல் நிகழ்ச்சி’ இவ்வருடம் டிசம்பர் 23ம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் 25 இடங்களில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இந் நிகழ்சித் திட்டமானது அடிப்படை மார்க்க அறிவு அவர்களது எதிர்கால கல்வி தொடர்பான வழிகாட்டல் திறன் விருத்தி  விடுமுறையை  விளைதிறன் மிக்கதாக களிப்பதற்கான வழிகாட்டல் போன்ற அம்சங்களை உள்ளடக்கியிருக்;கியிருப்பதானது சமூகத்தில் பல மட்டத்திலுள்ளவர்களாலும் பெற்றோராலும் கடந்த காலங்களில் பெரு வரவேற்பைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்ட நிலையில தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஆரம்பமாதவுள்ள இப்பருவ காலத்துக்கான நிகழ்ச்சிகளுக்கு விண்ணப்பபிக்கும் முறை மற்றும் மேலதிக விபரங்களை அறிவதற்காக

ஆண்கள் – 0777833930 அல்லது 0779197575

பெண்கள் – 0772992136

பின்வரும் இலக்கங்களை தொடர்புகொள்ள முடியும் என ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் வேண்டுகோள் விடுக்கின்றது.

 

Web Design by Srilanka Muslims Web Team