நாடாளுமன்றஉறுப்பினர் ரிசாத் பதியுதீன் கைது..! இலங்கை இனவாத அரசின் முஸ்லிம் விரோதப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது..! - Sri Lanka Muslim

நாடாளுமன்றஉறுப்பினர் ரிசாத் பதியுதீன் கைது..! இலங்கை இனவாத அரசின் முஸ்லிம் விரோதப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது..!

Contributors


இலங்கையில் தற்போதைய ராஜபக்சேதலைமையிலான அரசு பொறுப்பேற்றதற்குப்பிறகு தொடர்ந்து முஸ்லிம் விரோதப்போக்கோடு செயல்பட்டு வருகிறது.

இனவாத இலங்கைஅரசு முதலில் ஈழத்தமிழர்களை குறிவைத்து வேட்டையாடியது. இப்போது முஸ்லிம்களை குறிவைத்துதனது சர்வாதிகார போக்கை வெளிப்படுத்தி வருகிறது.

சிறுபான்மைஇனங்களை அழித்து அடிமைப்படுத்தும்
பெரும்பான்மை சிங்களஇனவெறி தான் தனதுநோக்கம்என்பதனை இலங்கைஅரசு நிரூபித்துவருகிறது.

இதன்தொடர்ச்சிதான் முஸ்லிம்களின் கலாச்சார அடையாளங்களுக்கு தடை விதிப்பது, முஸ்லிம் இயக்கங்களுக்கு தடைவிதிப்பது, முஸ்லீம் தலைவர்களை கைதுசெய்வது என்ற இலங்கைஅரசின் சமீபத்திய நடவடிக்கைகள்.

இதன்ஒருபகுதியாக இன்று அதிகாலை அகிலஇலங்கை முஸ்லிம்காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரியாஸ்பதியுத்தீன் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது வன்மையான கண்டனத்திற்குரியது.

இலங்கைஅரசு தனதுஇனவாத, சிறுபான்மை விரோத நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்என்று வலியுறுத்துகிறேன்.

கைதுசெய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

KKSM தெஹ்லான் பாகவி
தேசிய துணைத்தலைவர்
SDPI கட்சி

Web Design by Srilanka Muslims Web Team