நாடாளுமன்றத் தேர்தல் எப்போது? - வெளியானது அறிவித்தல்! - Sri Lanka Muslim

நாடாளுமன்றத் தேர்தல் எப்போது? – வெளியானது அறிவித்தல்!

Contributors

எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு பின்னர், எந்தவொரு நேரத்திலும் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு அதிகளவிலான சாத்தியங்கள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய நாடாளுமன்றத்தை எதிர்வரும் மார்ச் மாதத்தின் பின்னர், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கலைப்பதற்கான அதிகாரம் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி வசம் காணப்படுகின்றது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற நிலைமை காரணமாக, நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், நாடாளுமன்ற ஆயுட்காலம் முடிவடைவதற்கு முன்னர், நாடாளுமன்றத் தேர்தலை நடத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team