நாடுதழுவிய மின்துண்டிப்பு; நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம் உறுதி - இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள்! - Sri Lanka Muslim

நாடுதழுவிய மின்துண்டிப்பு; நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம் உறுதி – இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள்!

Contributors

இன்று நள்ளிரவு 12 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாகவும், அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் மூடப்படும் என்றும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இலங்கை மின்சார சபை தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

“மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் தோல்வியடைந்ததால், திட்டமிட்டபடி இன்று (0 8) நள்ளிரவு முதல் நாங்கள் அனைவரும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளோம். அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் மூடப்படும். நாளை (09) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் மின்சாரம்தடைப்படும்” எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Web Design by Srilanka Muslims Web Team