நாடும் தேசமும் உலகம் அவளே என்ற செயற்றிட்டத்தில் தம்பலாகாமத்தில் மகளீர் தின விழா..! - Sri Lanka Muslim

நாடும் தேசமும் உலகம் அவளே என்ற செயற்றிட்டத்தில் தம்பலாகாமத்தில் மகளீர் தின விழா..!

Contributors
author image

எப்.முபாரக்

சிறுவர் மற்றும் மகளிர் எதிர்நோக்கும் வீட்டு வன்முறை இணைய வன்முறை என்ற தொனிப்பொருளில் நாடும் தேசமும் உலகம் அவளே என்ற செயற்றிட்டத்தில் தம்பலாகாமம் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச மகளீர் செயலகம் இணைந்து நடாத்திய  மகளீர் தின விழா இன்று(6) தம்பலாகாமம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வு தம்பலாகாமம் பிரதே செயலாளர் ஜெயகௌரி ஸ்ரீபதி தலைமையில் நடைபெற்றது. இதன் போது தம்பலகாமம்  கோட்டத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் சித்திரப் போட்டி கண்காட்சியும் நடைபெற்றது. முந்நூற்றி ஒன்று சித்திரங்களில் மூன்று தெரிவு செய்யப்பட்டு சான்றிதழ்களும் பணப் பரிசில்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் தம்பலாகாமம் பிரதேச செயலாளர் ஜெயகௌரி ஸ்ரீபதி,மாகாண ஆணையாளர் சிறுவர் நன்னடத்தை பாராமரிப்பு,மாவட்ட மகளீர் அபிவிருத்தி உத்தியோகத்தர்,இலங்கை வங்கி முகாமையாளர்(தம்பலாகாமம் கிளை),ரெக்டோ அமைப்பு பணிப்பாளர் ஜே.எம்.அசார் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.
            

Web Design by Srilanka Muslims Web Team