நாடு ஆபத்தான நிலையில் உள்ளதால், கொழும்புக்கு எவரும் வரவேண்டாம் - விடுக்கப்பட்ட அறிவிப்பு..! - Sri Lanka Muslim

நாடு ஆபத்தான நிலையில் உள்ளதால், கொழும்புக்கு எவரும் வரவேண்டாம் – விடுக்கப்பட்ட அறிவிப்பு..!

Contributors

கொவிட் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட் டாலும், நாடு ஆபத்தான நிலையை நோக்கி நாளுக்கு நாள் சென்று கொண்டிருப்பதாக கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

எனவே அவசியத் தேவை தவிர ஏனைய தேவைகளுக்கு பொதுமக்கள் எவரும் கொழும்புக்கு வருகை தரவேண்டாம் என அவர் பொதுமக்களிடம் வினயமாக கேட்டுக் கொண்டுள்ளார்.

கொழும்பு நகருக்கு வருவது உயிருக்கு ஆபத்தானது என்பதால் கொழும்புக்கு வருவது அவசியமா என்பதிலும் பார்க்க முடிந்தவரை வீட்டிலேயே இருக்குமாறு மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

கொவிட் வைரஸ் கொழும்பு நகரம் முழுவதும் வேகமாக பரவி வருவதாகவும், ஒவ்வொரு பகுதியிலும் மற்றும் வர்த்தக இடங்களிலும் நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் அதிக எண்ணிக்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் இறப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

Web Design by Srilanka Muslims Web Team