நாடு ஆபத்தான நிலையில் உள்ளது, 4 மாதங்களுக்கு எந்த வைபவங்களுக்கும் அனுமதி வழங்காமல் இருக்க ஆராய்வு..! - Sri Lanka Muslim

நாடு ஆபத்தான நிலையில் உள்ளது, 4 மாதங்களுக்கு எந்த வைபவங்களுக்கும் அனுமதி வழங்காமல் இருக்க ஆராய்வு..!

Contributors
author image

Editorial Team

எதிர்வரும் நான்கு மாதங்களுக்கு எந்தவொரு வைபவத்திற்கும் அனுமதி வழங்காமல் இருப்பது குறித்து கருத்திற்கொள்ள உள்ளதாக இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

 

கடந்த காலத்தில் வழங்கப்பட்டிருந்த வழிகாட்டல்கள் ஓரளவு தளர்த்தப்பட்ட போதிலும் தற்போது அவ்வாறு செயற்பட முடியாது என அவர் சுட்டிக்காட்டினார். சுகாதார வழிகாட்டல்களை மக்கள் கடைப்பிடிக்காததால் மீண்டும் ஆபத்து நிலையை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

தற்போது இளம் சந்ததியினர் மத்தியிலும் இந்த வைரஸ் பரவும் ஆபத்துத் தோன்றியுள்ளது. நாட்டை முடக்குவதற்கு இதுவரை தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை.

தற்போதைய நிலைமை குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் விசேட கூட்டமொன்று இடம்பெறும் என இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Web Design by Srilanka Muslims Web Team