நாடு இருளில் மூழ்கும் அபாயம்! - Sri Lanka Muslim
Contributors

மின்சாரக் கட்டணத்தை ஜனவரி மாதம் கட்டாயம் அதிகரிக்கவே வேண்டும் என்று தெரிவித்துள்ள எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, அவ்வாறு அதிகரிக்காவிடின் நாடு இருளில் மூழ்குவதை தவிர்க்க முடியாது. இருண்ட யுகத்துக்கு செல்லவேண்டும் என்றார்.

பாராளுமன்றத்தில் இன்று (06) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மின்சாரக் கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ளாவிட்டால், அடுத்த வருடத்தில் 6 மணித்தியால மின்சார விநியோகத் தடைக்கு செல்லவேண்டி ஏற்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
மின்சார அலகு ஒன்றுக்கான செலவு 56 ரூபா 90 சதமாக உள்ளபோதும், அதில் அரைவாசிக்கட்டணமே மின்சாரப் பாவனையாளர்களிடம் இருந்து அறிவிடப்படுகிறது.
எனவே இந்த நட்டத்தை ஈடுசெய்ய முடியாதுபோனால், எதிர்காலத்தில் மின்சார உற்பத்தியை மேற்கொள்ளமுடியாத நிலை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Web Design by Srilanka Muslims Web Team