நாடு எவ்வேளையிலும்முடக்கப்படலாம் – ஜனாதிபதி தலைமையில் அவசர பேச்சு..! - Sri Lanka Muslim

நாடு எவ்வேளையிலும்முடக்கப்படலாம் – ஜனாதிபதி தலைமையில் அவசர பேச்சு..!

Contributors

நாட்டில் கொரோனா மற்றும் டெல்ட்டா வைரஸ் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையில் 1.5 வீதமானோர் உயிரிழப்பதாக அரசு அறிவித்திருக்கிறது.

இதனால் நாட்டை சில வாரங்களுக்கு முடக்குவதற்கு அரசு தீவிர ஆலோசனைகளை நடத்தி வருகிறது. தற்போதும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கூட்டமொன்று நடந்துவருகிறது .

கொரோனா தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை நூறை தாண்டியுள்ளதால் உடனடியாக பொதுமுடக்கம் ஒன்றுக்கு செல்வதே சிறந்ததென அரச உயர்மட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து எந்நேரத்திலும் நாட்டை முடக்குவதற்கான அறிவிப்பு வெளிவரலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை ,டெல்ட்டா திரிபு பரவும் நிலையில், மக்கள் சீக்கிரமாக தடுப்பூசியை பெறுமாறும் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியில் நடமாட வேண்டாம் எனவும் சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team