நாடு கடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபரொருவர் கைது - Sri Lanka Muslim

நாடு கடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபரொருவர் கைது

Contributors

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு கடத்தப்படட நபரொருவர் வெலிகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் (21) குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பயங்கரவாத விசாரணை பிரிவினால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்படும் போது சந்தேகநபரிடம் இருந்து 27 இலட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

42 வயதுடைய சந்தேகநபர் மாவனெல்லை கிரிகங்தெணிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team