நாடு மீண்டும் முடக்கமா? அதிகாரிகள் விளக்கம். - Sri Lanka Muslim

நாடு மீண்டும் முடக்கமா? அதிகாரிகள் விளக்கம்.

Contributors

நாட்டை மீளவும் முழுமையாக முடக்குவது என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றதென பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக எதிர்வரும் பண்டிகைக்காலத்தில் நாட்டை முழுமையாக மூடுவதற்கு பலத்தரப்பாலும் யோசனை தெரிவிக்கபட்டுள்ளது.

இந்த நிலையில், இது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோகன இதனைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ரீதியில் பாதிக்கபட்ட பொருளாதாரத்தை மீளவும் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்க்பட்டுள்ளதாகவும், அதற்கான முதலிட்டு மற்றும் வர்தக நடவக்கைகள் முன்னெடுக்கபட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில், மீண்டும் நாட்டை முடக்குவது நடைமுறைக்கு சாத்தியமற்றதாக காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே, பொதுமக்கள் இந்த பண்டிகை காலப்பகுதியில் உரிய சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி, பாதுகாப்பாக செயற்ப்பட வேண்டியது கட்டாயமானதெனவும் பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோகன மேலும் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team