நாடு முடக்கப்படுமா? ஜனாதிபதி எடுத்த முக்கிய தீர்மானம்! - Sri Lanka Muslim

நாடு முடக்கப்படுமா? ஜனாதிபதி எடுத்த முக்கிய தீர்மானம்!

Contributors

நாட்டில் மீண்டுமொரு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தையோ அல்லது பயணத் தடைகளையோ விதிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று காலை கூடிய கொரோனா ஒழிப்பு ஜனாதிபதி செயலணியில் முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, கொரோனா அச்சுறுத்தல் அதிகமான பிரதேசங்களில் மக்களைத் தெளிவூட்டலை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கும்படி சுகாதாரத்துறையினருக்கு ஜனாதிபதி இன்று பணித்துள்ளார்.

அதேபோல நாடு முழுவதிலும் முடக்கம் செய்யவோ அல்லது பயணத்தடை விதிக்கவோ எந்த தீர்மானமும் இன்றைய தினத்தில் எடுக்கப்படவில்லை.

மக்கள் அதிகமாகக் கூடுகின்ற நிகழ்வுகளை தற்காலிகமாக நிறுத்த அறிவுறுத்தும்படியும் சுகாதாரப் பிரிவினருக்கு ஜனாதிபதி பணித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team