நாடு முடக்கப்படும் என்கிறார் அமைச்சர் லொக்குகே - ஜனாதிபதி தலைமையில் தற்போது அவசர கூட்டம்..! - Sri Lanka Muslim

நாடு முடக்கப்படும் என்கிறார் அமைச்சர் லொக்குகே – ஜனாதிபதி தலைமையில் தற்போது அவசர கூட்டம்..!

Contributors

கொரோனா வைரஸ் பரவிவரும் சூழ்நிலையில் நாடு முடக்கப்படும் எனவும் ஜனாதிபதி, அதற்கான திகதி மற்றும் நேர காலத்தை தீர்மானிப்பார் எனவும் மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டின் தற்போதைய கொரோனா நிலைமை மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய தீர்மானங்கள் குறித்து ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று தற்போது
இடம்பெற்று வருகிறது.

குறித்த கலந்துரையாடலானது ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்று வருகிறது.

இவ்வாறான கலந்துரையாடல்களில் பங்கேற்காமல் இருந்துவந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் இன்றைய கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

எனவே, தற்போதைய கொரோனா நிலைமையில் நாட்டின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பாரக்கப்படுகிறது.

Web Design by Srilanka Muslims Web Team