நாடு முழுவதும் விவசாயிகள் எதிர்கொண்டுள்ள நெருக்கடி குறித்து தொடர்ந்து குரல் எழுப்புவேன் - சுமந்திரன்..! - Sri Lanka Muslim

நாடு முழுவதும் விவசாயிகள் எதிர்கொண்டுள்ள நெருக்கடி குறித்து தொடர்ந்து குரல் எழுப்புவேன் – சுமந்திரன்..!

Contributors

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கிளிநொச்சி கண்டாவளையில் உள்ள தனது பூர்வீக வயலை உழுது விதைவிதைத்தார். இரசாயன உரங்கள் மற்றும் விவசாய இராசயானப் பொருள் பற்றாக்குறையை தொடர்ந்து நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பெரும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கின்றனர்.

காலபோக விதைப்பு தொடங்கியுள்ள நிலையில் உழவர்களின் உரப்பிரச்சினையை வெளிச்சமிட்டு காட்டும் வகையில் எம். ஏ. சுமந்திரன் கிளிநொச்சி கண்டாவளை உள்ள தன் பூர்விக வயலை சம்பிரதாய பூர்வமாக உழுது, விதை விதைத்திருந்தார். இப் பிரச்சினை குறித்து விவசாயிகள் சார்பில் சுமந்திரன் தொடர்ந்து குரலெழுப்புவார்.என முகநூலில் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team