நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மீண்டும் மூடல்..! - Sri Lanka Muslim

நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மீண்டும் மூடல்..!

Contributors

நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் 07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்தும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தீவிரமடைந்து வரும் கொவிட் தொற்று காரணமாக குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதேபோல், அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய நாட்டில் உள்ள அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளையும் எதிர்வரும் 07 ஆம் திகதி வரை தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கத்தோலிக்க ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது.

முன்னதாக நேற்று (30) வரையில் நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மற்றும் கத்தோலிக்க பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team