நாட்டின் டொலரின் பெறுமானத்தை சேமிப்பதற்காக வாகனங்களின் இறக்குமதி இடைநிறுத்தம்! - Sri Lanka Muslim

நாட்டின் டொலரின் பெறுமானத்தை சேமிப்பதற்காக வாகனங்களின் இறக்குமதி இடைநிறுத்தம்!

Contributors

வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கவுள்ளதாக

திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்திருக்கிறார்.


கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே திறைசேரியின் செயலாளர் இந்த விடயத்தை தெரிவித்தார்.இறக்குமதி செய்யப்படும் வாகனங்களில் தனிபட்ட பாவனைக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களின் இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளன. நாட்டின் டொலரின் பெறுமானத்தை சேமிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.இது சம்பந்தமாக வாகன இறக்குமதியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.வாகன இறக்குமதியின் போது நாட்டின் அபிவிருத்திக்கு முதலிடம் வழங்கும் வகையில் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாக திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல மேலும் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team