நாட்டின் முஸ்லிம் சனத்தொகை அதிகரிக்கக் கூடும் என்ற பிரச்சாரம் வெறும் வதந்தியே – சுஹைர் MP - Sri Lanka Muslim

நாட்டின் முஸ்லிம் சனத்தொகை அதிகரிக்கக் கூடும் என்ற பிரச்சாரம் வெறும் வதந்தியே – சுஹைர் MP

Contributors
author image

Editorial Team

நாட்டின் முஸ்லிம் சனத்தொகை அதிகரிக்கக் கூடும் என்ற பிரச்சாரம் வெறும் வதந்தியேயாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம்.சுஹைர் தெரிவித்துள்ளார்.

 

நாட்டின் சிங்கள பௌத்த சனத்தொகையை விடவும் முஸ்லிம் மக்களின் சனத்தொகை உயர்வடையக் கூடுமென்ற வகையில் சில தரப்பினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

 

எனினும், இந்தப் பிரச்சாரங்களில் எவ்வித உண்மையும் கிடையாது எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.

 

வெலிகமவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

எம்.எம். சுஹைர் ஈரானுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இலங்கையில் சிறந்தளவு கல்வி வளர்ச்சி காணப்படும் நிலையில் இவ்வாறான போலி வதந்திகளை மக்கள் நம்புவது வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

 

சில ஊடகங்களும் சில தரப்பினரும் பிழையான பிரச்சாரத்தை தூண்டி விடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

பிரிவினைவாத குழப்பங்களை தூண்டும் நோக்கில் சில தரப்பினர் இவ்வாறான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

ஒரு நூற்றாண்டு காலத்தில் சிங்கள பௌத்த சனத்தொகையை விடவும் முஸ்லிம்கள் அதிகளவு சனத்தொகையை கொண்டிருப்பார்கள் என்ற பிரச்சாரம் பிழையானது என அவர் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

புள்ளி விபர அடிப்படையில் சிங்கள பௌத்தர்களின் சனத்தொகை வீழ்ச்சி அடையும் என்பது பியைழான கருத்து என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 

முஸ்லிம்கள் சிங்கள தமிழ் மக்களுக்கு கூடுதலான தொடர்புகளைப் பேண வேண்டியது அவசியமாகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.(GTN)
 

Web Design by Srilanka Muslims Web Team