நாட்டில் இடம்பெறுகின்ற காடழிப்பினை அரசாங்கம் உடனடியாக தடை செய்ய வேண்டும்.. ! - Sri Lanka Muslim

நாட்டில் இடம்பெறுகின்ற காடழிப்பினை அரசாங்கம் உடனடியாக தடை செய்ய வேண்டும்.. !

Contributors
author image

Editorial Team

நாட்டில் இடம்பெறுகின்ற காடழிப்பினை உடனே தடுத்து நிறுத்தும் நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமந்த வித்யாரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்.

காடழிப்பு உட்பட அனைத்து குற்றச்சாட்டுகளிலும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ தன்னை நீக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

மேலும் கோட்டபாய ராஜபக்க்ஷ ஜனாதிபதியாக வர உதவிய மகா சங்கமும் அறிவுசார் குழுக்களும் இப்போது ஜனாதிபதியை விட்டு விலகியுள்ளனர்.

மேலும் காடழிப்பு இடம்பெறுவதாக பெரும்பான்மையான குருமார்கள், அரசு அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் ஜே.வி.பி என பலரும் குரல் எழுப்பும்போது இதுபோன்ற பேரழிவு எதுவும் இல்லை என்று கூறுகிறார்கள்.

இந்நிலையில் எது எவ்வாறாயினும் காடழிப்பு செயற்பாடுகளை தடுக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team