நாட்டில் நாளைமுதல் பௌத்த பிக்குகளுக்கு தனியான நீதிமன்றம் ! - Sri Lanka Muslim

நாட்டில் நாளைமுதல் பௌத்த பிக்குகளுக்கு தனியான நீதிமன்றம் !

Contributors

நாட்டில் பௌத்த பிக்குகளுக்கு தனியான நீதிமன்றம் உருவாக்கு வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்ட நிலையில்   நாளை கண்டியில் இந்த நீதிமன்றம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட உள்ளது.என்று அறிவிக்கப் பட்டுள்ளது .

குற்றச் செயல்களில் ஈடுபடும் பௌத்த துறவிகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இந்த நீதிமன்றில் தனியாக நடைபெறவுள்ளது. பௌத்த பிக்குகளுடன் தொடர்புடைய சகல வழக்குகளும் இந்த நீதிமன்றில் துரித கதியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை வழக்குகள் இங்கு ஒரு சில நாட்களுக்குள் வழக்கு விசாரணைகள் பூர்த்தியாகும் என பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார். நாட்டின் பொதுவான சட்டமே இங்கும் நடைமுறைப் படுத்தப் படும் என்று கருதப்படுகிறது. நாட்டில் அண்மைக்க காலமாக குற்றசெயல்களில் அதிகமான பெளத்த பிக்குகள் ஈடுபடுவதை காட்டும்  தகவல்கள் வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது-TC

Web Design by Srilanka Muslims Web Team