நாட்டுக்கு எது நல்லது என்பது ஆளும் கட்சியின் சில அமைச்சர்களுக்கு புரிவதில்லை – விஜயதாச ராஜபக்ஷ - Sri Lanka Muslim

நாட்டுக்கு எது நல்லது என்பது ஆளும் கட்சியின் சில அமைச்சர்களுக்கு புரிவதில்லை – விஜயதாச ராஜபக்ஷ

Contributors

-gtn-

நாட்டுக்கு எது நல்ல என்பது ஆளும் கட்சியின் சில அமைச்சர்களு;கு புரிவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டுக்கும் அரசாங்கத்திற்கும் நன்மை ஏற்படக் கூடிய காரியங்கள் தொடர்பில் ஆளும் கட்சியின் சில அமைச்சர்களுக்கு போதியளவு விளக்கம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

லட்மிர் கொள்கைகளின் அடிப்படையில் தனிப்பட்ட சட்ட மூலமொன்றை பாராளுமன்றில் சமர்ப்பிக்க முயற்சித்த போது ஆளும் கட்சியினர் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டதாகத் தெரிவித்துள்ளார். இலங்கை பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது என்பதனை மறந்து விட்டே ஆளும் கட்சி அமைச்சர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்..
லட்மிர் கொள்கைகளின் அடிப்படையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் சர்வதேச அளவில் இலங்கைக்கு நன்மதிப்பு அதிகரித்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

நீதித்துறையின் அரசியல் தலையீடுகளை தடுக்கும் நோக்கிலேயே இந்த தனிப்பட்ட நபர் சட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்க முயற்சிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்தச் சட்டம் நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு குந்தகத்தை ஏற்படுத்தாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team