"நாட்டு மக்களும் நாட்டின் அனைத்து துறைகளும் வீழ்ச்சியடைவற்கு முக்கிய காரணம் கோட்டா" - முஜிபூர் ரஹ்மான்! - Sri Lanka Muslim

“நாட்டு மக்களும் நாட்டின் அனைத்து துறைகளும் வீழ்ச்சியடைவற்கு முக்கிய காரணம் கோட்டா” – முஜிபூர் ரஹ்மான்!

Contributors

நாட்டு மக்களும் நாட்டின் அனைத்து துறைகளும் வீழ்ச்சியடைவற்கு முக்கிய காரணம் ஜனாதிபதி மேற்கொண்ட மோசமான தீர்மானமே. எனினும், புதிய பிரதமருக்கு அந்த ஜனாதிபதியினதும் நாட்டை இந்தளவு வீழ்ச்சியுறச் செய்தவர்களுக்கும் மத்தியிலேயே செயல்பட வேண்டியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.

சர்வதேசம் இலங்கை மீது நம்பிக்கை இழந்துள்ள இத்தகைய சூழ்நிலையில், எமது பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்ய சர்வதேச நாடுகள் எவ்வாறு உதவி செய்ய முடியுமென அவர் சபையில் (07) கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர்,

நாட்டில் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்துவதற்காக சட்டங்கள் இருந்தன. எனினும் கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதி அதனை இல்லாதொழித்ததால் தற்போது அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பல மடங்கு அதிகரித்துள்ளன. உதாரணமாக 300 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட பருப்பு தற்போது 620 ரூபாவாகவும் 350 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட ரின் மீன் தற்போது 600 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

800 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட நெத்தலிக்கருவாடு 1,700 ரூபாவாகவும் 360 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட பால் மா ஆயிரம் ரூபாவுக்கு அதிகமாகவும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். நாடு மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது” என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team