நாட்டை இராணுவமயப்படுத்தும் யோசனையை உத்தியோகபூர்வமற்ற விதத்தில் முன்வைக்கும் முட்டாள்தனமான கருத்திற்கு அஞ்சி நாங்கள் சரணடையமாட்டோம்..! - Sri Lanka Muslim

நாட்டை இராணுவமயப்படுத்தும் யோசனையை உத்தியோகபூர்வமற்ற விதத்தில் முன்வைக்கும் முட்டாள்தனமான கருத்திற்கு அஞ்சி நாங்கள் சரணடையமாட்டோம்..!

Contributors

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை- சரத் வீரசேகரவின் கருத்து குறித்து ஆசிரிய தொழிற்சங்கள் கடும் சீற்றம் – இராணுவமயப்படுத்தும் முயற்சி என குற்றச்சாட்டு

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளமை குறித்து ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளன.
அமைச்சரின் கருத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான எங்கள் உரிமைக்கான அச்சுறுத்தல் என தெரிவித்துள்ள ஆசிரிய தொழிற்சங்கங்கள் இராணுவமயப்படுத்தல் குறித்த ஆர்வத்தை அமைச்சர் வெளிப்படுத்தியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளன.

அமைச்சரின் அறிக்கை தொடர்பில் அமைச்சரவை தனது தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தவேண்டும் என ஜோசப் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமைச்சர் தெரிவித்துள்ள கடுமையான நடவடிக்கைகள் என்னவென அறியவிரும்புகின்றோம் இலங்கையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் உள்ளவேளையில் அமைச்சர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார் எனவும் ஜோசப்ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஜிஎஸ்பி வரிச்சலுகையை இழந்தால் அதனால் ஏற்படப்போகும் ஆயிரக்கணக்கான தொழில் இழப்புகளிற்கான பொறுப்பை அமைச்சர் சரத்வீரசேகரவே ஏற்றுக்கொள்ளவேண்டும் என சுரகிமு ஸ்ரீலங்கா அமைப்பை சேர்ந்த பகியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.
நிலைமையின் தீவிரத்தை நீங்கள் உணரமுடியாவிட்டால் உடனடியாக பதவி விலகுங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாரிய ஊழலில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக ஏன் அதிகாரத்தில் உள்ளவர்கள் கடுமையான நடவடிக்கையை எடுக்கவில்லை என கல்விதொழில்துறையினர் சங்கத்தின் தலைவர் உலப்பன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டை இராணுவமயப்படுத்தும் யோசனையை உத்தியோபூர்வமற்ற விதத்தில் முன்வைக்கும் நடவடிக்கையல்லாவா இது என கேள்வி எழுப்பியுள்ள அவர் அமைச்சரின் முட்டாள்தனமான கருத்திற்கு அஞ்சி நாங்கள் சரணடையமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team