நாட்டை காட்­டிக்­கொ­டுக்­க­மாட்டோம் : ஐ. தே. கட்சி எம்.பி. ஜோன் அமரதுங்க » Sri Lanka Muslim

நாட்டை காட்­டிக்­கொ­டுக்­க­மாட்டோம் : ஐ. தே. கட்சி எம்.பி. ஜோன் அமரதுங்க

Contributors

சர்­வ­தேச நாடுகள் எமது நாட்­டுக்கு எதி­ராக செயற்­படும் போது அச்­ச­வால்­க­ளுக்கு முகம் கொடுப்­ப­தற்­கான ஒத்துழைப்பை வழங்­குவோம். இது ஒவ்­வொரு நாட்­டி­னது எதிர்க்­கட்­சி­யி­னதும் கடப்­பா­டாகும் என எதிர்க்­கட்­சியின் பிர­தம கொற­டாவும் எம்.பி.யுமான ஜோன் அம­ர­துங்க தெரி­வித்தார்.
அர­சாங்­கத்­திற்கும் எதிர்க்­கட்­சி­யி­ன­ருக்கும் இடையே கருத்து முரண்­பா­டுகள் இருக்­கலாம். ஆனால், அதற்­காக நாட்டை காட்­டிக்­கொ­டுக்­க­மாட்டோம் என்றும் தெரி­வித்தார்.

இது தொடர்­பாக ஜோன் அம­ர­துங்க எம்.பி.மேலும் தெரி­விக்­கையில்,

நாட்­டுக்கு சர்­வ­தேச ரீதி­யாக எதிர்ப்­புக்கள் வரும்­போது ஆளும் கட்சி, எதிர்க்­கட்சி என்ற பேதங்­க­ளுக்கு அப்பால் சிந்­திக்க வேண்டும். அதன்­போது நாட்டின் பாது­காப்பே முத­லி­டத்தில் இருக்கும். எனவே, நாட்­டுக்­காக முழு ஒத்­து­ழைப்­பையும் வழங்­குவோம்.

ஐ.நா. மனித உரிமை ஆணைக்­குழு மாநாட்டில் பதி­ல­ளிக்க வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கடப்­பா­டாகும். அதில் தலை­யி­டு­வ­தற்கு எமக்கு அதி­காரம் இல்லை.

யுத்த வெற்­றியை நாம் ஒரு போதும் எதிர்த்­த­தில்லை. பயங்­க­ர­வா­தத்தை ஒழித்­ததை வர­வேற்­கின்றோம்.

மேற்குலக நாடுகளின் அழுத்தங்களுக்கு அரசாங்கம் அச்சமின்றி முகம் கொடுப்பது வரவேற்புக்குரியதாகும்.(vk)

Web Design by Srilanka Muslims Web Team