நாட்டை பிளவுபடுத்தும் அதிகாரத்தை வழங்க போவதில்லை: ஜனாதிபதி - Sri Lanka Muslim

நாட்டை பிளவுபடுத்தும் அதிகாரத்தை வழங்க போவதில்லை: ஜனாதிபதி

Contributors

நாட்டை பிளவுபடுத்துவதற்கு முயற்சிக்கும் எந்தவொரு அதிகாரத்தையும் வழங்குவதற்கு தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தயாரில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார். அனைவரும் ஒரே நாடென்ற ரீதியில் செயற்படவேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

தென்மாகாண சபை கட்டடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கையளிப்பதற்காக இன்று முற்பகல் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி இந்த விடயத்தினைக் தெரிவித்துள்ளார் .

மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கம் என யாராக இருந்தாலும், அனைவரும் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டே செயற்பட வேண்டுமென ஜனாதிபதி கூறியுள்ளார்.

அரச கொள்கைகளுக்கு மதிப்பளித்து அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்படுவது முக்கியத்துவம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மக்கள் சேவையை உரியமுறையில் முன்னெடுக்காத எவரும் முன்நோக்கிப் பயணிக்க முடியாதென குறிப்பிட்டார். 575 மில்லியன் ரூபா செலவில் காலியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்தத் கட்டடம் 07 மாடிகளை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Web Design by Srilanka Muslims Web Team