நாட்டை முடக்குங்கள் - மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை..! - Sri Lanka Muslim

நாட்டை முடக்குங்கள் – மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை..!

Contributors

நாட்டை முடக்குமாறு கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் அதிகாரபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா பெருந்தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முடக்கத்தை அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று பரவுகை ஆரம்பமான காலப் பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியமை மற்றும் தடுப்பூசி ஏற்றுகை போன்றவற்றில் ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், கொரோனா பெருந்தொற்றினால் நாட்டு மக்கள் இன்று பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாகவும், கொரோனா பிறழ்வுகளினால் பாரிய அனர்த்த நிலைமை உருவாகியுள்ளதாகவும் சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக மாநாயக்க தேரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறான ஓர் பின்னணியில் மருத்துவதுறையினரின் பரிந்துரைகளுக்கு அமைய நாட்டை ஒரு வாரத்திற்கு முடக்க வேண்டுமென ஜனாதிபதியிடம் மாநாயக்க தேரர்கள் கோரியுள்ளனர்.

மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரி பீடாதிபதி வராகொட தம்மஸி பஞ்ஞானந்த தேரர் ஆகியோர் இந்த கோரிக்கை கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team