நானாட்டான்: நீண்டகால வரலாற்றை மறைத்து முஸ்லிம்கள் புதிதாக வந்தவர்களாக சித்தரிப்பு: றிப்கான் - Sri Lanka Muslim

நானாட்டான்: நீண்டகால வரலாற்றை மறைத்து முஸ்லிம்கள் புதிதாக வந்தவர்களாக சித்தரிப்பு: றிப்கான்

Contributors

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் பூவரசன்குளம் மற்றும் பொன்தீவு கண்டல் கிராமத்தில் இரு சமூகங்களுக்கிடையில் பிரச்சினைகள் எற்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மையுமில்லை என்று வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்தார்.

பொன்தீவு கண்டல் பிரதேசத்தில் வேண்டத்தகாத சம்பவம் ஒன்றை சிலர் உருவாக்கி தமிழ்-முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் பிளவினை ஏற்படுத்த எடுக்கப்பட்ட முயற்சியென்பதாகவும்,தாம் அக்கிராமத்துக்கு விஜயம் செய்து இரு சமூக மக்களுடன் கலந்துரையாடல்களை நடத்தியதாகவும் அவர் கூறினார்.

மேலும் றிப்கான் பதியுதீன் தெரிவிக்கையில் -1990 ஆம் ஆண்டு பொன்தீவு கண்டல் கிராம அதிகாரி பிரிவில் வசித்துவந்த 50  முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த 220 பேர்கள் வெளியேற்றப்படடனர்.பின்னர் புத்தளத்தில் அவர்கள் தற்காலிக கொட்டில்களில் கடந்த 20 வருடங்களாக வாழ்ந்து வந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு ஏற்பட்ட சமாதான சூழலையடுத்து ஏப்ரல் மாதம் மீள்குடியேருவதற்கான வேண்டுகோள் கடிதத்தினை பூவரசன்குளம் பள்ளி பரிபாலன சபை ஊடாக நானாட்டான் பிரதேச செயலாளர் திரு.சந்திர அய்யாவிடம் கையளித்தனர்.அதற்கமைய பிரதேச செயலாளர் அவர்கள் இம்மக்களின் கோறிக்கை தொடர்பில் வடமாகாண காணி ஆணையாளருக்கு முழுமையான அறிக்கையொன்றினை சமர்பித்தார்.அதனடிப்படையில் வடமாகாண காணி ஆணையாளரின் அனுமதி பெறப்பட்டு காணிகள் நில அளவை திணைக்களத்தினால் அளக்கப்பட்ட போதுடன்,ஒவ்வொரு குடும்பத்திற்கும் தளா 20 பேர்ச் வீதம் வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டது.

அதன் பின்னர் பொன்தீவு கண்டல் மற்றுமு; பூவரசன்குளம் மக்கள் பிரதி நிதிகளுக்கும் பிரதேச செயலாளருக்கும் இடையில் நடை பெற்ற கலந்துரையாடலொன்றின் போது,15 பேர்ச் வீதம் காணி வழங்குவதென்ற உடன்பாட்டுக்கு வந்த போது.முஸ்லிம் மக்கள் சார்பில் கலந்து கொண்டவர்கள் அதுக்கு உடன்பாடு தெரிவித்தனர்.இதனடிப்படையில் 2011 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் மீண்டும் காணி அளவை மேற்கொள்ளப்பட்டு சட்ட ரீதியாக காணி கச்சேரி நடத்தப்பட்டு காணிகள் அடையாளப்படுத்தப்பட்டன.

அதே வேளை இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீடமைப்பு திட்டத்தில் அப்பிரதேசத்தில் வீடற்ற நிலையில் இருந்த தமிழ்-முஸ்லிம் குடும்பங்கள் உள்வாங்கப்பட்டு அதற்கான கொடுப்பனவு வழங்கப்பட்டு அப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இக்கிராமத்தில் முஸ்லிம்கள் நீண்டகாலமாக வாழ்ந்து வந்த வரலாற்றை மறைத்து முஸ்லிம்கள் புதிதாக வந்தவர்களாக சித்தரித்து இனரீதியான பிரச்சிணைக்கு துhபமிடும் பணிகளில் மதவாதிகளும்,சில இன ஒற்றுமையினை சீரகுலைக்கும் அரசியல்வாதிகளும் செயற்படுவதாகவும்,இதற்கு அப்பாவி பிரதேச மக்கள் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்றும் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் கேட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team