நானாட்டான் பிரதேச காணி பகிர்ந்தளிப்புக்கு பொன்தீவு கண்டல் மக்கள் கடும் எதிர்ப்பு! - Sri Lanka Muslim

நானாட்டான் பிரதேச காணி பகிர்ந்தளிப்புக்கு பொன்தீவு கண்டல் மக்கள் கடும் எதிர்ப்பு!

Contributors

மன்னார், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பொன்தீவு கண்டல் கிராமத்தில் காணி பகிர்வது தொடர்பாக நானாட்டான் பிரதேச செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திற்கு பொன்தீவு கண்டல் கிராம மக்கள் தமது வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இவ்விடையம் தொடர்பாக பொன்தீவு கண்டல் கிராம மக்கள் சார்பாக பொன்தீவு கிராம அபிவிருத்திச் சங்கம் நானாட்டான் பிரதேச செயலாளருக்கு நேற்று (6-12-20123) வெள்ளிக்கிழமை அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
குறித்த கடித்தில் மேலும் குறிப்பிடுகையில்,
மேற்படி பொன்தீவு கண்டல் காணி தொடர்பில் தங்களால் எமக்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பாகவும், குறித்த காணி தொடர்பாக எங்களுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை குறித்தும் பொன்தீவு கண்டல் கிராம மக்களாகிய நாங்கள் எமது கண்டனத்தையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்தி நிற்கின்றோம்.
இதனால் ஏற்படக்கூடிய சகல பிரச்சினைகளுக்கும் தாங்களே பொறுப்பு என்பதனையும் கூறிக் கொள்ளுகின்றோம்.
குறித்த காணி பிரித்துக்கொடுப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முடிவு நானாட்டான் பிரதேச செயலகத்தினால் தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்ட முடிவாக உள்ளது.
இதற்கும் எமது கிராம மக்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இத்தீர்மானம், எம்மிடமும், எமது கிராம மக்களிடமும் கலந்தாலோசிக்கப்படாமல் எடுக்கப்பட்ட முடிவு ஆகும்.
இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
என குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (tti)

Web Design by Srilanka Muslims Web Team