நான்காவது வெற்றியை பதிவு செய்தது அவுஸ்திரேலியா - Sri Lanka Muslim

நான்காவது வெற்றியை பதிவு செய்தது அவுஸ்திரேலியா

Contributors

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின்  நான்காவது போட்டியிலும் அவுஸ்திரேலியா வெற்றிவாகை சூடியுள்ளது.

கிற்ஸ் ரொஜர்சின்  அபார துடுப்பாட்டத்தினால்,  அவுஸ்திரேலிய அணி நான்காவது டெஸ்டில்  8 விக்கட்டுக்களால் இலகுவெற்றியீட்டியது.

இதன்மூலம் இம்முறை ஆஷஷ் தொடரை இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில் 4 – 0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா தன்வசப்படுத்தியுள்ளது.

மெல்பர்னில் இன்று நிறைவுபெற்ற நான்காவது போட்டியில் 231 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியை ரொஜர்ஸ் மற்றும்  வொட்சன் ஜோடி வெற்றிப்பாதையில் இட்டுச் சென்றது..

116 ஓட்டங’களை பெற்ற ரொஜர்ஸ் டெஸ்ட் அரங்கில் தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்தார்.

ஷேன் வொட்சன் ஆட்டமிழக்காமல் 83 ஓட்டங்களை பெற்றார்.

ஆட்டநாயகனாக அவுஸ்திரேலியாவின் மிச்சல் ஜொன்சன் தெரிவானார்.


Web Design by Srilanka Muslims Web Team