நான்கு பவுன் தங்க சங்கிலியை திருடி விற்பனை செய்த இருவர் விளக்கமறியலில் » Sri Lanka Muslim

நான்கு பவுன் தங்க சங்கிலியை திருடி விற்பனை செய்த இருவர் விளக்கமறியலில்

arrest-slk.polce

Contributors
author image

எப்.முபாரக்

 திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நான்கு பவுன் தங்க சங்கிலியை திருடி விற்பனை செய்த இரு இளைஞர்களை இம்மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா இன்று(12) உத்தரவிட்டார்.

திருகோணமலை, லிங்கநகர்,மற்றும் ராஜவரோதயம் பகுதியைச் சேர்ந்த இருபது வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர் வீடு ஒன்றில் நான்கு பவுனுடைய தங்கச் சங்கிலியை திருடி ஒரு இலட்சத்து அறுபத்து மூவாயிரத்துக்கு விற்பனை செய்த நிலையிலே பொலிஸாருக்கு கிடைத்ததகவலின் அடிப்படையில் நேற்று (11) மாலையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் இருவரையும் இன்று(12) பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Web Design by The Design Lanka