நான்கு வயதிலேயே பில்கேட்ஸின் அறிவுக்கு இணையாக திகழும் இங்கிலாந்து சிறுவன் - Sri Lanka Muslim

நான்கு வயதிலேயே பில்கேட்ஸின் அறிவுக்கு இணையாக திகழும் இங்கிலாந்து சிறுவன்

Contributors

இங்கிலாந்தில் ஒரு சிறுவன் தனது நான்காவது வயதிலேயே மிகப்பெரிய புத்திசாலியாக மாறியுள்ளான். அவனுக்கு பில்கேட்ஸ், ஐன்ஸ்டீன், மற்றும் அமெரிக்காவின் பிரபல அறிவியல் மேதை stephen hawking அவர்களின் புத்திசாலித்தனத்திற்கு இணையாக திகழ்கிறான் என்று மருத்துவ அறிக்கை உறுதிப்படுத்துகிறது.

Sherwyn Sarabi என்ற சிறுவன் தனது இரண்டாவது வயதிலேயே தனது புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தியுள்ளான். இவனது ஐ.க்யூவை பார்த்துவிட்டு அவனை இரண்டாவது வயதிலேயே பள்ளியில் சேர்த்துக்கொண்டனர். தற்போது 4 வயதாக இருக்கும் சிறுவன் Sherwyn Sarabi, எட்டு வயது மாணவர்கள் படிக்கும் வகுப்பில் உள்ளார்.

இந்த சிறுவனின் ஐக்யூ, பிரபல மைக்ரோசாப்ட் மேதை பில்கேட்ஸ், அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன், மற்றும் Stephen Hawking ஆகியோருக்கு இணையான 160 ஸ்கோர் என்ற ஐக்யூ இருப்பதால் மருத்துவர்கள் அனைவரும் இந்த சிறுவனை அதிசயமாக பார்க்கின்றனர்.

இவன் தனது 10வது மாதத்திலேயே முதல் வார்த்தையை உச்சரிக்க தொடங்கிவிட்டான் என்றும் முழு வாக்கியங்களை தனது 20 மாதத்தில் பேச ஆரம்பித்துவிட்டான் என்று இந்த சிறுவனின் தாயாரும் முன்னாள் ஆசிரியையும் ஆன Amanda Sarabi, என்பவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இவர் தனது மகனுக்கு 1 வயது முதலே வாக்கியங்களை சொல்லிக்கொடுத்து பிறவியிலேயே அதிபுத்திசாலியாக பிறந்த தனது மகனுக்கு ஒரு நல்ல ஆசிரியையாக இருந்துள்ளார். இதற்காகவே இவர் தனது ஆசிரியர் தொழிலை ராஜினாம செய்துவிட்டு, முழுநேரமும் தனது மகனின் புத்திசாலித்தனத்தை வளர்க்கவே தன்னுடைய நேரத்தை செலவிட்டுள்ளார்.

இந்த அற்புத சிறுவன் இதுவரை சுமார் 940 புத்தகங்களை படித்து முடித்துள்ளான் அதில் encyclopaedia என்ற புத்தகமும் ஒன்று. இந்த சிறுவனுக்கு அவனது தாயாரும், ஆசிரியர்களும் சிறப்பான முறையில் கல்வி பயிற்றுவித்து வருகின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team