நான் அடுத்த தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா என்பதை மக்களே தீர்மானிப்பர் - ஜனாதிபதி..! - Sri Lanka Muslim

நான் அடுத்த தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா என்பதை மக்களே தீர்மானிப்பர் – ஜனாதிபதி..!

Contributors


ஐந்து வருடங்களே தமக்கு ஜனாதிபதியாக இருக்கும் அனுமதியை மக்கள் தந்திருப்பதாகவும் அதற்கடுத்தும் இப்பதவியில் இருக்க வேண்டுமா அல்லது போட்டியிட வேண்டுமா என்பது தொடர்பில் மக்களே தீர்மானிப்பார்கள் என்றும் தெரிவிக்கிறார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.

தான் அடுத்த தடவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென பல்வேறு தளங்களில் அதிருப்தி நிலவுவதாகவும் இருப்பினும் தமக்குத் தரப்பட்ட பதவிக்காலத்தை சரியாகச் செய்து முடிப்பதிலேயே தாம் கவனமாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

எஞ்சியிருக்கும் காலப்பகுதியில் தாம் எதைச் செய்ய வேண்டும் என்பது தொடர்பில் தெளிவாக இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team