நான்.."ஆசிபா" பேசுறன்....! » Sri Lanka Muslim

நான்..”ஆசிபா” பேசுறன்….!

aasifa.jpg2

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

எம்.எம்.றியாள்..
புல்மோட்டை


நிரம்பி வழிகிறது
இப்பொழுது..
அனுதாபங்களும்..!
எனக்கான
பிராத்தனைகளும்..!

எனக்காக ..
வீதி வீதியாய்…
பேரணிகள்
எனக்காக…
திருத்தலங்களும்
அனுதாபக் கண்ணீரால்….!

ஆனால் நான்
அழும் போதும்..
வலி தாங்க முடியாமல்
கதறிய போதும்…
என்னை யாரும்
திரும்பி பார்க்கலயே….!

எட்டு வயதை
எட்டியவள்…நான்
எட்டு நாட்கள்..
எத்தனை..பேரால்
எப்படியெல்லாம்….!

பசித்தது…வலித்தது..
தண்ணீரின்றி…
நா வறண்டு தவித்தேனே….
அப்போ..
யாரும் கிட்ட வரலயே…!

காமுக நாய்களால்
சிதைக்கப் பட்டேன்..
நிராகதியற்று
எறியப்பட்டேன்..
யாரும் வந்து கேக்கலயே..

காமுகர்களின்
இராஜ்ஜியத்தில்
பச்சிளம் சிட்டின்…
ஈருடல் பசியாற
நடந்த…
அரங்கேற்ற வேளையில்…
காப்பாற்ற
யாரும் வரலயே….!

அரும்பியதுமோ இல்லை..!
உனர்வுகளோ
நிரம்பியதுமோ இல்லை..!
காம வெறியர்கள்
என்னை அறுத்து ..
கூறுபோட்டு விட்டார்களே…..!

ஒருவரா இருவரா…
என்னால்…
எண்ண முடியவில்லை..
மிருகவேட்டையில்
சிதறப்படும்..
இறைச்சி துண்டாக…
நான்..
பந்தாடப் பட்டேனே…!

தாயின் ஸ்பரிசம்
தாயின் பாசம்..
தாய் பால் குடித்து
வளர்ந்த நாய்கள்..
நானும் ஒரு
தாய் …
என்பதை…
உணரவில்லையே…!

கொஞ்சமும்..
ஈனிரக்கம் இல்லாமல்
என்னை..
வாட்டி வதைத்து விட்டார்களே..!

உங்களின்..
காம ஆசைகளை
மாலைகளாக்கி..
அழகு பார்த்து..
என் கழுத்தை
நெரிக்கும் அளவிற்கு..
நிர்பந்த இலட்சியங்களாக…
இச்சைகள் மாறிவிட்டதே…!

தூரிகை தேடினேன்
எனக்குள்
‘எழுதுகோல்’ திணிக்கப்பட்டது…

மாறுபட்டு சிந்தித்தேன்..
உட்சாக மாத்திரையால்..
என்னை…
வேறுபடுத்திவிட்டார்கள்..!

சீர்கெட்ட கயவர்களே..
நீங்களும்..
மனிதப் பிரவிதானே..
எப்படி..
இப்படி என்னை சிதைக்க..
உள்ளம் விரும்பியது….!

ஓ… நீங்கள்
மனித உருவில் நடமாடும்
மிருகங்களாச்சே…!

அதனால்தான்..
உங்களால்…

சிந்திக்கப் படவில்லை
சிதறடிக்கப்படுகிறோம்…..!!
செதுக்கப்படவில்லை
சிதைக்கப்படுகின்றோம்…!!

Web Design by The Design Lanka