நான் எனும் நீ நூல் மீள் வெளியீடு (Photo) » Sri Lanka Muslim

நான் எனும் நீ நூல் மீள் வெளியீடு (Photo)

r99

Contributors
author image

ஷபீக் ஹுஸைன்

கவிஞர் திலகம் எம்.எச்.எம். அஷ்ரப் எழுதிய ‘நான் எனும் நீ’ கவிதை நூல் மீள் வெளியீடு நிகழ்வு இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழாவின் இறுதி நிகழ்வாக நேற்று (27) மருதமுனை அல்-மனார் வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதித் தலைவர் முழக்கம் மஜீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நூலின் வெளியீட்டுரையை அமைச்சர் ரவூப் ஹக்கீமும், நூலாய்வினை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழித்துறை தலைவர் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ்வும், “அஷ்ரப் சில நினைவுகள்” என்ற தலைப்பிலான உரையை உமா வரதராஜனும், “நான் எனும் நீயும் நீ எனும் நானும்” என்ற கவிதையை ஆசுகவி அன்புதீனும் பாடினார்.

இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழாவை முன்னிட்டு செய்யித் ஹஸன் மௌலானா மற்றும் மூத்த ஊடகவியலாளர் நிந்தாவூர் சலீம் அவர்களது 50 வருட ஊடக பணியை பராட்டி அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

மருதமுனை மத்திய குழு உறுப்பினர்களாலும், தென் இந்திய மூத்த ஊடகவியலாளர் மனவை அசோகன் அர்களாலும் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், மாகாண அமைச்சர் ஏ.எல். நஸீர், மாகாணசபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன், ஜவாத், சிப்லி பாருக், தவம் உட்பட கவிஞர்கள், ஊடகவியலாளர்கள் என பெருமளவிலானோர் கலந்து சிறப்பித்தனர்.

r r-jpg2 r-jpg2-jpg3 r-jpg2-jpg3-jpg4 r-jpg2-jpg3-jpg4-jpg6 r-jpg2-jpg3-jpg4-jpg6-jpg9 r99

Web Design by The Design Lanka