"நான் பொலிஸ் அமைச்சரானால் அரசாங்கத்தில் உள்ள அனைவரையும் சிறையில் அடைத்திருப்பேன்" - சரத் பொன்சேகா! - Sri Lanka Muslim

“நான் பொலிஸ் அமைச்சரானால் அரசாங்கத்தில் உள்ள அனைவரையும் சிறையில் அடைத்திருப்பேன்” – சரத் பொன்சேகா!

Contributors

“அரசாங்கம் மக்களை நிரந்தரமாக ஏமாற்றி வருகின்றது. அத்துடன் பிரதமரின் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியேற்ற ஊழல்வாதிகளை தண்டிக்க விருப்பம் இல்லையா?” என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கேள்வியெழுப்பியுள்ளார்.

கம்பஹாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

“நான் பொலிஸ் அமைச்சரானால் முதலில் இந்த அரசாங்கத்தில் உள்ள அனைவரையும் சிறையில் அடைத்திருப்பேன்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு முன்பாகவே நான் பிரதமராக பதவியேற்க வேண்டும் என்று கூறப்பட்டது. அப்போது எனக்கு எந்த நிபந்தனையும் இருக்கவில்லை.

செய்ய வேண்டிய திட்டம் பற்றி பேசினேன். அந்த திட்டத்திற்கு ஜனாதிபதி உடன்படவில்லை.

இதனையடுத்து, ரணிலுக்கு பதவி வழங்கப்பட்டது. எனினும் அவர் எதுவுமே செய்யாமல் இருக்கிறார்” என அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team