நாமலின் சிந்தனை வேலைத்திட்டம் : சாய்ந்தமருதில் கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்வு ! - Sri Lanka Muslim

நாமலின் சிந்தனை வேலைத்திட்டம் : சாய்ந்தமருதில் கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்வு !

Contributors

(மாளிகைக்காடு நிருபர்)

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் எண்ணக்கருவில் உருவான நாட்டில் உள்ள அனைத்து கடற்கரை கரையோரப் பிரதேசங்களையும் சுத்தம் செய்வோம் எனும் தொனிப்பொருளில் சாய்ந்தமருது பிரதேச கடற்கரை பிரதேசம் சுத்தப்படுத்தும் நிகழ்வு இன்று காலை தேசிய இளைஞர் சேவைகள் மன்ற தேசிய சம்மேளன பிரதிநிதி சிப்னாஸ் அஸீஸின் தலைமையில் நடைபெற்றது.

இந்த வேலைத்திட்டத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவிப்பணிப்பாளர் டவலியு.ஜீ.ஏ.எஸ் கங்கா சாகரிக்கா, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஏ. முபாரக் அலி, இளைஞர் சேவைகள் மன்ற சாய்ந்தமருது பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி எம்.டீ.எம் ஹாரூன், அட்டாளைச்சேனை மற்றும் கல்முனை பிரதேச இளைஞர் சேவை அதிகாரிகள், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கேஸர கசும், தேசிய காங்கிரசின் தேசிய கொள்கைப்பரப்பு இணைப்பாளரும், நிஸ்கோ முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினருமான நூருல் ஹுதா உமர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முக்கியஸ்தர் றிஸ்லி முஸ்தபாவின் பிரத்தியோக செயலாளர் அல் ஜவாஹீர், வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவின் இணைப்பாளர் எம்.வை.எம். நிப்ராஸ், இளைஞர் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள், அம்பாறை மாவட்ட நிஸ்கா பணிப்பாளர் சபை உறுப்பினர் ஹிஷாம் பாபா, சாமர தேவப்பெரும, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அம்பாறை மாவட்ட சம்மேளன தலைவர், பிரதித்தலைவர், அக்கரைப்பற்று மற்றும் சாய்ந்தமருது பிரதேச சம்மேளன தலைவர்கள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team