நாமல் ராஜபக்ச 2022 ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்கிறாரா? அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்..! - Sri Lanka Muslim

நாமல் ராஜபக்ச 2022 ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்கிறாரா? அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்..!

Contributors

நாமல் ராஜபக்‌ச 2022 ஆம் ஆண்டில் பிரதமராகப் பதவியேற்பார் என்பது உறுதிப்படுத்தாத தகவல் என்று அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்கள் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

அமைச்சர் நாமல் ராஜபக்‌ச 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதமளவில் பிரதமராகப் பதவியேற்பார் என்று பிரபல ஜோதிடர் விஜித ரோஹன விஜேமுனி கணித்துக் கூறியுள்ளார்.

இந்நிலையில், “அமைச்சர் நாமல் ராஜபக்‌ச சுறுசுறுப்பாகப் பல்வேறு வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றார். அவர் 2022ஆம் ஆண்டில் பிரதமராகப் பதவியேற்கப் போகின்றாரா?” என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

“இது அரசியல் ரீதியான சந்தேகங்களை ஏற்படுத்தும் தகவலாகும். இதனை யார் வெளியிட்டார் என்பது தெரிந்திருந்தாலும், நான் இங்கு பெயர் குறிப்பிட விரும்பவில்லை.

இலங்கையில் மாத்திரமன்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் அரசியல் ரீதியான சந்தேகங்கள் பரப்பப்படுகின்றன. இதுபோன்ற கருத்துக்களை அரசு பாரதூரமாக எடுப்பதில்லை. இவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், நாளை மற்றொரு நபர் நியமிக்கப்படுவார் என்ற வதந்திகள் வரக்கூடும் என்றும் அமைச்சர் கூறினார்.

Web Design by Srilanka Muslims Web Team