நாய், பூனைகளின் உணவுக்கான வரிகளை குறைத்து அத்தியாவசிய பொருட்களின் வரிகள் அதிகரிப்பு. கயந்த கருணாதிலக - Sri Lanka Muslim

நாய், பூனைகளின் உணவுக்கான வரிகளை குறைத்து அத்தியாவசிய பொருட்களின் வரிகள் அதிகரிப்பு. கயந்த கருணாதிலக

Contributors

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நாய் , பூனைகளுக்கான உணவு வகைகளுக்குரிய
வரிகளை குறைத்துள்ள அரசாங்கம் அத்தியாவசியப் பொருட்களுக்கான வரிகளை அதிகரித்து மக்கள் மீது வரிச்சுமையை சுமத்தியுள்ளது என ஐ.தே. கட்சி எம்.பி. கயந்த கருணாதிலக நேற்று சபையில் தெரிவித்தார் .
பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே கயந்த கருணாதிலக எம்.பி. இதனைத் தெரிவித்தார் .
சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ,
வரவு – செலவுத்திட்டத்தில் ராஜபக்ஷ குடும்பத்திற்கே 50 வீதம் நிதியொதுக்கப்பட்டுள்ளது . அமைச்சர்களுக்கு மிகக் குறைந்த நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது . இதனால் எதிர்காலத்தில் அடிப்படை உரிமை மீறல் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு ஜெனீவா போகும் நிலை உருவாகலாம் .
மக்கள் மீது வரிகளை அதிகரித்துள்ள வரவு – செலவுத்திட்டமானது நாய் , பூனைகளின் உணவு வகைகளின் மீதான வரிகள் குறைக்கப்பட்டுள்ளது . சிந்தனை அரசாங்கம் 2,500 ரூபா சம்பள உயர்வை வழங்குவதாகக் கூறி இரண்டு வருடங்கள் கழிந்துவிட்டது . ஆனால் , இதுவரையில் கிடைக்கவில்லை .
அடிப்படைச் சம்பளத்தை உயர்த்தாது அரச ஊழியர்களுக்கு வெறுமனே ரூபா 1,200 மட்டுமே வழங்கப்படவுள்ளது . இது எவ்வளவு காலம் கிடைக்கும் , என்ன நடக்கும் என்பது தெரியாமல் உள்ளது . காய்ச்சல் வந்தால் மக்களுக்கு கொத்தமல்லி அருந்த முடியாத நிலை உருவாகியுள்ளது . கொத்தமல்லிக்கான வரி ரூபா 202 ஆக அதிகரித்துள்ளது . தம்பிக்கு முதலமைச்சர் பதவியை பெற்றுக் கொடுப்பதற்காக அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி இரகசியமாக வழங்கப்பட்டுள்ளது . செனல் 4 ஊடகவியலாளர்களை மதவாச்சியிலிருந்து ஆர்ப்பாட்டம் நடத்தி திருப்பி அனுப்பியதற்காக பரிசாக இவ்வமைச்சு வழங்கப்பட்டிருக்கலாம் . கசினோ சூதாட்டம் விபசாரம் , மது என ஒழுக்க விழுமியங்களை மீறி எப்படியாவது வருமானத்தை பெறுவதே அரசின் கொள்கையாகவுள்ளது .
இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை உருவாகியுள்ளது .
நஷ்டத்தில் இயங்கும் மிஹின் எயார் நிறுவனத்தை மூடிவிட்டால் எமது நாட்டுக்கு அதிகளவு அந்நியச் செலாவணியை பெற்றுக் கொடுக்கும் . வெளிநாடு சென்று தொழில்புரியும் இலங்கையருக்கு இலவசமாக விமான டிக்கட்டை வழங்க முடிந்திருக்கும் .
சாதாரண மக்களின் கனவுகளை கொள்ளையடிக்கும் வரவு – செலவுத் திட்டமாகும் . பெண்களுக்கான நலன்புரிகள் உழைக்கும் வர்க்கத்தினர் மறக்கப்பட்டு சாதாரண மக்களின் மீது வரிகளை அதிகரித்த அரசாங்கம் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் நாய் , பூனைகளுக்கான உணவுகளுக்கான வரிகளை குறைத்துள்ளது .(tn)

Web Design by Srilanka Muslims Web Team