நாராஹேன்பிட்டி வைத்தியசாலை கைக்குண்டு விவகாரம்! பின்னணியில் அரசியல்வாதி..! - Sri Lanka Muslim

நாராஹேன்பிட்டி வைத்தியசாலை கைக்குண்டு விவகாரம்! பின்னணியில் அரசியல்வாதி..!

Contributors

கொழும்பிலுள்ள நாராஹேன்பிட்டி பகுதியிலுள்ள அமைந்துள்ள முன்னணி தனியார் வைத்தியசாலையின் மலசலகூட பகுதியிலிரநது மீட்கப்பட்ட கைக்குண்டு, பிரபல அரசியல்வாதியொருவரின் வீட்டிலிருந்து எடுக்கப்பட்டது என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் அளித்துள்ள சாட்சியத்தின் படி இந்த தகவல் தெரிவிக்கப்பட்டள்ளது.

கொழும்பு -7 பகுதியிலுள்ள அமைச்சர் ஒருவரின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்திலிருந்து இக கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது என மேலும் தெரியவந்துள்ளது.

இந்த வீட்டின் திருத்த பணிகளுக்காக குறித்த சந்தேகநபர் கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை அங்கு தங்கியிருந்தமையும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

கட்டடதிருத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது குறித்த வீட்டில் எவரும் தங்கியிருக்கவில்லை என்பதுடன், அதற்கு முன்னர் அரசியல்வாதியொருவர் தங்கியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபருடன் தங்கியிருந்த மஹவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரிடமும் விசாரணைகளை நடத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

இது தொடரடபில் விசாரணை அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த சந்தேகநபர் விடுதலைப் புலி அமைப்புடன் தொடர்புப்பட்டவரா என்பது குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபருக்கு கைக்குண்டு தொடர்பில் பூரண தெளிவு காணப்படுகின்றமையை அடுத்தே விசாரணை முன்னெடுக்கப்பட்டள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைக்குண்டின் பாதுகாப்பு ஆணியை கழற்றி, நுளம்பு சுருளொன்றை இணைத்து, வெடிக்கும் வகையில் இந்த கைக்குண்டு தயாரிக்கப்பட்டுள்ளது எனவும் கைக்குண்டில் மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தமையினால் சந்தேகநபர் கைக்குண்டு தொடர்பிலான அறிவை கொண்டுள்ளவர் எனவும் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, மீட்கப்பட்ட கைக்குண்டும், விடுதலைப் புலிகள் பயன்படுத்திய கைக்குண்டும் ஒரே விதத்தை விதமாக காணப்படுகின்றது எனவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். (IBC)

Web Design by Srilanka Muslims Web Team