நாளை அனைத்து பிரதான வைத்தியசாலைகளின் முன் போராட்டம்..! - Sri Lanka Muslim

நாளை அனைத்து பிரதான வைத்தியசாலைகளின் முன் போராட்டம்..!

Contributors

ஐந்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நாளை(22) அனைத்து பிரதான வைத்தியசாலைகளின் முன்பாக போராட்டங்கள் நடத்தப்படும் என ஐக்கிய சுகாதார தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக நண்பகல் 12.00 மணியளவில் போராட்டம் ஆரம்பமாகும் என்றும் அனைத்து மருத்துவமனைகளின் முன்பும் ஒரே நேரத்தில் போராட்டம் நடத்தப்படும் என்றும் சங்கத்தின் பொதுச் செயலாளர் வண. தம்பிட்டியே சுகதானந்த தேரர் தெரிவித்தார்.

இந்தத் தொடர் போராட்டத்துக்குப் பிறகும் அரசு தனது கோரிக்கைகளுக்கு பதிலளிக்கவில்லை என்றால், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தயங்க மாட்டோம் என்றும் அவர் கூறினார்.

சுகாதார பணியாளர்களின் கோரிக்கைகள், அனைத்து சுகாதார பணியாளர்களுக்கும் கொவிட் அபாயக் கொடுப்பனவை வழங்குதல், தொழிலாளர் பற்றாக்குறைக்கு இழப்பீடு, அக்ரஹார கொடுப்பனவை வழங்கல்… ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடத்தப்படவுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team