நாளை இந்திய துணைத் தூதுவர்- கல்முனை மாநகர முதல்வர் சந்திப்பு - Sri Lanka Muslim

நாளை இந்திய துணைத் தூதுவர்- கல்முனை மாநகர முதல்வர் சந்திப்பு

Contributors

-அஸ்லம் எஸ்.மௌலானா-

இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் குமரன் மற்றும் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆகியோருக்கிடையிலான முக்கிய சந்திப்பு நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.

நாளை மாலை 4.30 மணியளவில் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரக அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது. இச்சந்திப்பின் போது கல்முனை மாநகர அபிவிருத்தி மற்றும் மாநகர சபை உறுப்பினர்களுக்கான பயிற்சிகள் வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்படுகிறது.

இச்சந்திப்பில் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் சிலரும் பங்கேற்கவுள்ளனர் என மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கதுல்லாஹ் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team