நாளை கத்தார் பனார் கேட்போர் கூடத்தில் சம கால அரசியல் சம்பந்தமாக ரவூப் ஹக்கீம் உரை - Sri Lanka Muslim

நாளை கத்தார் பனார் கேட்போர் கூடத்தில் சம கால அரசியல் சம்பந்தமாக ரவூப் ஹக்கீம் உரை

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

கத்தாரிலிருந்து பைரூஸ்


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீர் வழங்கல், நகர திட்டமிடல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அ நேற்று கத்தாருக்கு கள விஜயம் ஒன்றை மேற் கொண்டுள்ளார்.

இவ் விஜயம் தொடர்பாக ஏற்கனவே ஊடக பிரிவினால் அறிவிக்கப்பட்டதற்கு இணங்கவே இவ் விஜயம் இடம் பெற்றுள்ளது.

ரவூப் ஹக்கீம் நாளை அதாவது 21-11-16 திங்கள் கிழமை இரவு 8.00 மணிக்கு கத்தாரின் தலை நகரம் தோஹாவிலுள்ள ( fanar Auditorium ) பனார் கேட்போர் கூடத்தில் சம கால அரசியல் சம்பந்தமாக விரிவாக பேசவுள்ளார்.

குறித்த இவ் நிகழ்விற்கு இன,மத,மொழிக்கு அப்பால் கத்தாரிலுள்ள இலங்கை வாழ் சகோதரர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வேண்டும் என இவ் ஏற்பாட்டுக் குழுவினர் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team